‘10 ஆண்டுகளுக்குப் பிறகு’

கூடுமானவரை கதாநாயகிக்கு முக்கி யத்துவம் உள்ள கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருவ தாகக் கூறுகிறார் பிரியா பவானி சங்கர்.

அதேசமயத்தில் பல படங்களில் நடிக்க வேண்டும் எனும் ஆசையோ ஆர்வமோ தமக்கு இல்லை என்றும், தரமான படங்கள் மட் டுமே தமது இலக்கு என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் குறிப் பிட்டுள்ளார்.

சின்னத் திரையில் இருந்து சினிமா வுக்கு வரும் பலருக்கு உரிய வாய்ப்புகள் ஏன் கிடைக்கவில்லை என்பது தமக்கு இன் னும் புரியவில்லை என்று சொல்பவர், தனக்குத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் கிடைப்பது தன்னு டைய அதிர்ஷ்டம் என்கிறார்.

"ஆனால் அதிர்ஷ் டம் மட்டுமே போதாது என்பதை அனுபவ ரீதியில் புரிந்து கொண்டிருக்கிறேன்.

"இதில் என்னைப் போன்ற ஒருவர் சினி மாவுக்குள் வரும் போது நம்மை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளி, அவர் மனதில் உள்ள கதாபாத்திரத்துக்காக நம்மைத் தேர்வு செய்ய நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக ரசி கர்களுக்கு நம்மைப் பிடிக் கிறது என்ற காரணமும் கவனிக்கப்பட வேண்டும்.

"ரசிகர்கள் விரும்பும் வகையில் இரண்டு மூன்று படங்கள் நடித்துவிட்டுத் திடீரென பாதை மாறினாலும் இங்கே சிக்கல்தான்," என்று குறுகிய காலத்திலேயே கோடம்பாக்கம் குறித்துத் தெளிவாக அலசி ஆராய்கிறார் பிரியா பவானி சங்கர்.

'கல்யாணம் முதல் காதல் வரை' தொலைக் காட்சித் தொடரில் நடித்தபோது சினிமாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லையாம். ஆனாலும் வாய்ப்புகள் தேடி வந்ததாகக் குறிப்பிடுபவர், ரசிகர்களின் ஆதரவு தம்மை நெகிழ வைத்ததாகச் சொல்கிறார்.

பிரியா நடிப்பில் அடுத்து 'குருதியாட்டம்', 'மான்ஸ்டர்' என்று அடுத்தடுத்து மூன்று படங் கள் வெளியாக உள்ளன. இவற்றுள் 'மான்ஸ்டர்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, பிரியா மனதிலும் நிறைய எதிர் பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கதைப்படி, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரியா, ஒரு எலி என நால்வரும் ஒரு வீட்டுக்குள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதைக் களமாம். அதிலும் எஸ்.ஜே. சூர்யா வாழ்க்கையில் அந்த எலி புகுந்து விளையாடுமாம். இதனால் ஏற்படும் விளைவுகளை சுவாரசியமாக விவரித்தி ருக்கிறார் இயக்குநர் நெல்சன்.

"எலி சம்பந்தப்பட்ட காட்சிகளில் எண்பது விழுக்காட்டுக்கு உண்மையான எலியை வைத்தே படமாக்கினர். உங்களை விட எலியே கம்மியான டேக்குகளில்தான் நடித்தது என்பார் இயக்குநர். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரிப்பேன்.

"அடுத்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதற்குத் தொந்தரவு இல்லாத விஷயங்களை மட்டும் இப்போது சரியாகச் செய்து வருகிறேன்," என்கிறார் பிரியா பவானி சங்கர்.

தாம் திரைத்துறையில் மிளிர வேண்டும் என்ற விருப்பம் தனது குடும்பத்தாருக்கும் இருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிட்டுள்ள இவர், தனது ஒவ்வொரு படத்துக்கும் நெருக்கமானவர்கள் அளிக்கும் விமர்சனங்கள் தன்னையும் நடிப்பையும் மெருகேற்றிக்கொள்ள வெகுவாக உதவுகிறது என்கிறார்.

கொசுறு: மிக விரைவில் ரசிகர்கள் ஆதரவு பெற்ற முன்னணி நடிகர் ஒருவருடன் ஜோடியாக நடிக்க உள்ளார் பிரியா. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகுமாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!