மீண்டும் ‘சாட்டை’ வீசும் சமுத்திரக்கனி

“ஒரு கதைக்கான சில ஆரம்பப் புள்ளிகள் கிடைக்கும். அது சினி மாவாக மாறுவதற்கு அதற்கான பின்னல்கள் சரிவர அமைய வேண்டும்,” என்கிறார் இயக்குநர் அன்பழகன்.

அனைத்துத் தரப்பு ரசிகர்களை யும் கவர்ந்த நல்ல படைப்பான ‘சாட்டை’யின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அன்பழகன் தான் இதை இயக்குகிறார்.

இந்தக் கதைக்கான அடித் தளத்தைப் போட்டது சமுத்திரக் கனி என்று குறிப்பிடுபவர், இது அசலான மாணவர்களின் கதை என்கிறார்.

“‘சாட்டை’ மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. இப்போதுதான் அதை இணையத்தளத்தில் பதி வேற்றினோம். கொஞ்ச நாட்களி லேயே 1.5 மில்லியன் பேர் பார்த்தி ருக்காங்க. அதில் பள்ளி மாணவர் களாக இருந்தவர்களை இதில் கல்லூரிக்கு அழைத்து வந்தி ருக்கோம். 

“நகர்ப்புறத்தில் நடக்கும் கதை. இதில் தமிழ்ப் பேராசிரியராக சமுத்திரக்கனி பதவி உயர்வு பெற்று வந்திருக்கிறார். முதல் பாகத்தில் பார்த்த தயாளனைவிட இன்னும் கனிந்து வந்துள்ளார். 

“கல்லூரியை எப்படியாவது முதல் இடத்திற்குக் கொண்டு வரத் துடிக்கும் கதாபாத்திரம்.

“அதனால் நிர்வாகம் ஆசிரியர் களுக்கு கொடுக்கும் நெருக்கடி, அதன் விளைவாக அவர்கள் மாணவர்கள் மீது திணிக்கும் அழுத்தம்... மாணவர்கள் படுகிற பாடு.

“அதனால் மாணவர்கள் வாழ்க் கையை அதன் போக்கில் எதிர் கொள்ளத் தெரியாமல் இயந்திரம் போன்று மாறிவிடக்கூடிய சூழல் எல்லாம் இதில் மனதிற்கு நெருங் கியும், உள்ளபடியும் சுவாரசிய மாகவும் இருக்கும்,” என்கிறார் அன்பழகன்.