குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் உருவாகி உள்ளது ‘மான்ஸ்டர்’

நெல்சன் வெங்கடேசன் இயக்கத் தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’  கோடம் பாக்கத்தில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
கருணாகரன் முக்கிய வேடத் தில் நடித்துள்ளார். இப்படத்தை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள் என்கிறார் எஸ்.ஜே. சூர்யா. அதற் கான காரணத்தையும் விளக்கு கிறார்.
“குழந்தைகளுக்கும், செல்ல பிராணிகளுக்கும் எப்போதுமே ஒரு நெருங்கிய உறவு இருக்கும். இப்படத்தில் எலியை வைத்து முக்கிய காட்சிகளை எடுத்திருக் கிறார்கள். இயக்குநர் ஒவ்வொரு காட்சியிலும் கண் இப்படி இருக்க வேண்டும், கன்னம் இப்படி இருக்க வேண்டும் என்று நுட்ப மாக அனைத்தையும் விளக்கி நடிக்க வைத்தார். 
இப்படம் எனக்கு திருப்பு முனையாக அமையும் என உறுதி யாக நம்புகிறேன்,” என்கிறார் எஸ்.ஜே. சூர்யா.