மேலும் ஒரு திகில் படத்தில் ஹன்சிகா

‘அரண்மனை’யின் வெற்றி தந்த உற்சாகத்தில் தொடர்ந்து திகில், பேய் கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஹன்சிகா.

‘அரண்மனை’ இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட் டுள்ளாராம் இயக்குநர் சுந்தர்.சி. இதில் திரிஷா, ஹன்சிகா இரு வரும் நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், ‘குலேபகாவலி’ எஸ். கல்யாண் இயக்கும் திகில் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் ஹன்சிகா. இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்குகிறது.

“தமிழில் தற்போது நிறைய திகில் படங்கள் வெளிவருகின் றன. கறுப்புப் பணத்தை மைய மாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறேன். இதில் ஹன்சிகா புதிய தோற்றத்தில் காட்சிய ளிப்பார். அவருடையதுதான் படத்தின் முதன்மைக் கதாபாத்தி ரம்,” என்கிறார் கல்யாண்.

ஹன்சிகாவுக்கு இந்தக் கதை மிகவும் பிடித்துப்போனதாம். அதனால் உடனடியாக கால்‌ஷீட் ஒதுக்கிவிட்டாராம்.