‘தேவி 2’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

நடிகர் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவி 2’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி  வெளியாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான ‘தேவி’ திரைப்படம் சிறந்த வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தேவி 2’ என்ற தலைப்பில் இயக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். இதில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி, நந்திதா ஸ்வேதா, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏற்கெனவே இப்படத்தின் ‘டீசர்’ வெளியான நிலையில், இப்போது இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகியுள்ளது. இதில் முதல் பாகத்தில் வந்த ரூபி பேயுடன் புதிதாக ஒரு பேயும் சேர்ந்துகொண்டு அலப்பறை செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இப்படம் வரும் மே 31ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்