மன்னிப்பு கேட்ட நடிகை ரா‌ஷி கன்னா

ஒரு படம் வெற்றிப் படமாக அமைவதற்கு அந்தப் படத்தின் கதையும் காட்சிகளும் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்பும் அந்த நடிப்புக்கேற்ற வசனமும் அந்த வசனத்துக்கேற்ற குரலும் முக்கியம். அவை அப் படக்கதையையும் காட்சிகளையும் மேலும் மெருகூட்டிக் காட்டும். 

இதுபோல் ‘அயோக்யா’ படத்தில் ரா‌ஷி கன்னா நடித்துள்ள காட்சிகளைத் தனது வளமான குரலைத் தந்து மேலும் மெருகூட்டி இருந்தார் பிரபல நடிகை ரவீணா. 

ஆனால் ரவீணாவுக்கு அந்தப் பெருமை சென்று சேரவில்லை. ஏனெனில் அவர் தந்த ‘டப்பிங்’ குரலை வெளியுலகுக்குத் தெரியாமல் இப்படத்தின் இயக்குநர் வெங்கட் மோகன் இருட் டடிப்பு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்திருந்தார் ரவீணா. 

அதைப் பார்த்த ரா‌ஷி கன்னா, ரவீணாவிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

படக்குழு செய்த தவற்றுக்காக ரா‌ஷி கன்னா மன்னிப்புக் கேட்டிருப்பது பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

‘டெம்பர்’ படத்தின் மறுபதிப்பான ‘அயோக்யா’ படம் அண்மையில் நல்ல விமர்சனங்களுடன் வெளிவந்தது.  இப்படத்தில் விஷாலுடன் ரா‌ஷி கண்ணா நடித்துள்ளார். 

ஆனால் இப்படத்தின் முடி வில் நடித்த நடிகர்களின் பெயர் பட்டியலில் ‘டப்பிங்’ பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என  டுவிட்டரில்  ரவீணா வருத் தம் தெரிவித்திருந்தார்.

“உணவுக்கடை அண்ணன் கள், ஓட்டுநர்கள், சாயம் அடித்தவர் கள், ஒலி, ஒளி மேலாளர்கள் என அனைவரது பெயர்களும் இடம்பெற்றி ருந்தன. ஆனால் குரல் கொடுத்த எங்க ளின் பெயர்கள் மட்டும் அடிக்கடி மறக்கப் படுகிறது. இதற்கெல்லாம் ஒரு நல்ல நேரம் வரும் என காத்திருக்கிறோம்,” என கூறியிருந்தார்.

‘அடங்க மறு’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அயோக்யா’, படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக ‘சிங்கத் தமிழன்’ படத்தில் நடித்துவருகிறார் ரா‌ஷி கன்னா.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடனும் நடித்துக்கொண்டுள்ள ரா‌ஷி கன்னா  நேர்காணல் ஒன்றில், “சின்ன வயதில் எனக்கு நடிகர் ஷாருக்கான் மீதுதான் அதிக ஈர்ப்பு இருந்தது. தற்போது அது அப்படியே நடிகர் அஜித் மீது மாறியுள்ளது. அவரது சிரிப்பு ஒன்றே போதும், பிரமாதம். அவரோடு இணைந்து நடிக்கும்போது அந்தச் சிரிப்பை நான் நேரில் ரசிப்பேன். அவ ரது புன்முறுவலை அண்மையில் ‘விஸ்வாசம்’ படத்தில் ரசித்தேன்,” என்று கூறியுள்ளார்.