அஞ்சலி: பேயோடு நடிக்கலாம்; விளையாடப் பிடிக்காது

அஞ்சலி: பேயோடு நடிக்கலாம்; விளையாடப் பிடிக்காது

2 mins read
b5c16031-8e8f-475c-a67e-34501962dafc
அஞ்சலி -

பேயாக நடிக்கலாம், ஆனால் அதேவேளையில் பேயோடு ::விளையாட எல்லாம் எனக்குப் பிடிக்காது என்று கூறியுள்ளார் நடிகை அஞ்சலி.

பெண்களை மையப்படுத்தும் கதைகளில் மட்டுமின்றி நாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அப்படி முக்கியத்துவம் கொடுப்பது இப்போது அதிகரித்து வருகிறது. இந்த மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வெளிச்சம் என் மீதும் பாய்வதில் பெரும் திருப்தியாக உணர்கிறேன் என்று கூறியுள்ள அஞ்சலி தமிழக ஊடகங்களுடன் விரைவில் வெளிவரவுள்ள 'லிசா' பேய் படம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

"சினிமா என்றால் எனக்கு உயிர். அதில் ஓர் அங்கமாக எப்போதுமே இருக்கவேண்டும் என விரும்புகிறேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ரசித்து நடிப்பேன். ஒற்றைப் பாடலுக்கு இருமுறை மட் டுமே ஆடியிருக் கிறேன். ஒற் றைப் பாடலுக்கு நடனமாடினால் என்ன தவறு எனத் தோன்றிய தால்தான் நடனமாடினேன்.

"லிசா' படக்கதையைக் கேட்டதும் பிடித்துவிட்டது. தவிர 3டி படம் என்றவுடன் ஆர்வத்தோடு ஒப்புக்கொண்டேன். நிஜத்தில் பேய் பயம் உண்டு. ஆனால், படப்பிடிப்பில் பயந்ததில்லை. நடிப்பு என்றவுடன் பயம் போய்விடும்.

"கொடைக்கானலில் பெரிய வீட்டில் படப்பிடிப்பு நடத்தினோம். அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் பேய் இருப்பதாகச் சொன்னார்கள். அதற்காகவே படப்பிடிப்பு முடித்த கடைசிநாள் இரவு, இயக்குநர் உட்பட மொத்த படக்குழுவும் அந்த வீட்டில் போய் தங்கிவிட்டுக் காலையில் வந்தார்கள்.

"அந்த வீட்டில் பேயும் இல்லை, ஒன்றுமில்லை என்றனர். அந்த விஷப்பரிட்சைக்குப் போகாமல் நான் நழுவிவிட்டேன். பேயாக நடிப்பதுடன் சரி; பேயோடு விளையாடுவது எனக்கு ஒத்து வராது, பிடிக்கவும் பிடிக்காது.

"என் வேடத்தை முன்னிலைப்படுத்தியே கதை நகர்வது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும் பெரிய பொறுப்பு அது. படத்தில் அதிகம் என்னைத்தான் பார்க்கப் போகிறீர்கள், நன்றாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது என்னை மட்டுமே சேரும். ஆகையால் ரொம்பவே சிரமப்பட்டு நடித்தேன்.

"சினிமாவில் நாயகிகளின் பங்கிருக்கும்.

இப்போது அந்த நிலைமை மாறி வருகிறது.

சினிமாவில் நல்ல விஷயங்களும் சொல்கிறார்கள். சினிமாவை எப்படிப் பார்க்கிறோம் என்பதுதான் விஷயம். 13 ஆண்டுகள் திரையுலக வாழ்க்கையில் என்ன கற்றுக்கொண்டேன் என்பதைவிட பல விஷயங்களில் முன்னேறி இருக்கிறேன் என்று சொல்லலாம். ஒரு விஷயத்தை எப்படி அணுக வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். முன்பெல்லாம் குழந்தைத்தனமாக உடனே கோபம் வந்துவிடும். இப்போது அப்படியில்லை," என்று கூறியுள்ளார் அஞ்சலி.