ஆன்ட்ரூ: இதுதான் பொருத்தமான தலைப்பு

அர்ஜுன், விஜய் ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘கொலைகாரன்’ விரை வில் திரை காண உள்ளது. 

இது முழுநீள திகில் படமாக உருவாகி இருப்பதாகச் சொல்கி றார் இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ். இது வழக்கமான திகில் கதையாக இருக்காதாம். தவிர, திகிலையும் மீறிய சில அம்சங்கள் ரசிகர்களைக் கவர்ந்து இழுக்கும் வகையில் இருக்குமாம்.

“திகில் கதைகளுக்கு என ஒரு வடிவமைப்பு உள்ளது. ஒரு கொலை அல்லது ஒரு சம்பவம், அது ஏன், எதனால் நடந்தது எனும் கேள்விகள் படரும். அவற் றுக்கு விடை கிடைத்தால் படம் முடிந்துவிடும். ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை இப்படிப் பட்ட கேள்விகளுக்கு அப்பால் மேலும் பல தளங்கள் உள்ளன. 

“இப்படிப்பட்ட கதையை உரு வாக்க வேண்டும் என்பதற்காகவே பல மாதங்கள் கடுமையாகச் சிந்தித்து உழைத்திருக்கிறேன்,” என்கிறார் ஆன்ட்ரூ லூயிஸ். இதற்கு முன்பு புதுமுகங்களை வைத்து ‘லீலை’ என்ற படத்தை இயக்கி உள்ளாராம். 

ஆனால், அதைவிட இயக்குநர் எஸ்.ஜே. சூர்யாவிடம் ‘வாலி’யில் இருந்து ‘நியூ’ தெலுங்கு மறுபதிப்பு வரை உதவியாளராகப் பணியாற் றிய அனுபவமே தமக்கு இன்று வரை பக்கபலமாக இருப்பதாகச் சொல்கிறார். 

விஜய் ஆண்டனி படம் என் றாலே இப்படி எக்குத்தப்பாகத் தான் தலைப்பு வைக்க வேண்டுமா? என்று கேட்டால் தன் முகத்தில் படரும் புன்னகையை மறைக்காமல் பதிலளிக்கிறார் லூயிஸ். 

‘பிச்சைக்காரன்’  படம் வெற்றி பெற்றதால் இப்படி ஒரு தலைப்பை வைக்கவில்லையாம். கதைக்கேற் பவே தலைப்பு வைக்கப்பட்டதாகவும் முழுக் கதையைக் கேட்டபிறகு விஜய் ஆண்டனியும்  இக்கருத்தை ஏற்றுக்கொண்டதாகவும் சொல் கிறார்.

“இது ஒரு கொலை, சில மர் மங்கள் தொடர்பான கதை. அதனால் இந்தத் தலைப்பே ஏகப் பொருத்தமானது. இதில் விஜய் ஆண்டனி யார், நாயகிக்கு என்ன வேலை, வில்லன் யார் என்றெல்லாம் கேட்காதீர்கள். அவையெல்லாம் தெரிவித்தால் படத்தைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும். விஜய் ஆண்டனி சார் எனக்கு மூத்தவர். அவருக் காகவே இந்தக் கதையை ஆர்வத் துடன் செதுக்கி இருக்கிறேன். 

“விக்ரம் வேதா’ படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தை உருவாக்குவதில் எனக்குப் பக்க பலமாக இருந்தனர். ஆண்டனி சார் வழக்கம்போல் அருமையாக ஒத்துழைத்தார். அவருக்கு மட்டு மல்ல, ஒட்டுமொத்த படக்குழுவுக் கும் இந்தப் படம் திருப்புமுனையாக அமையும்.

“நாயகி ஆ‌ஷிமா ஆஸ்திரேலியா வில் படித்தவர். அங்கே சிட்னி நகரில் வசிப்பவர். அவரால் இந் தளவு இயல்பான தரமான நடிப்பை வழங்கமுடியும் என யாருமே எதிர் பார்க்கவில்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.  

“அர்ஜுன் சாரைப் பொறுத்த வரை சினிமாவில் எங்கள் அனை வருக்குமே முன்னோடி. இப்போ தெல்லாம் நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே  நடிக்கிறார். என்னைப் பொறுத்தவரை அவரது திறமைக்குத் தீனி போடும் வகை யில் படங்கள் அமையவில்லை என்பேன்,” என்கிறார் ஆன்ட்ரூ.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை