‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ என்ற தலைப்பே ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் பல கேள்வி களையும் எழுப்பியுள்ளது. 

தமிழகத்தில் இருக்கும் ஏழை விவசாயியின் மகன், அவன் எதிர்கொள்ளும் பிரச்சி னைகள், அவற்றிலிருந்து அவன் எப்படி மீள்கிறான் என்பது குறித்து இந்தப் படம் பேசுமாம்.

“அதுமட்டுமல்ல, பெண் விடு தலை, குழந்தைத் தொழிலாளர்கள், மனித உழைப்பு சுரண்டப்படுவது குறித்தும் அலசியிருக்கிறோம். சுருக்கமாகச் சொல்வது என்றால் நிறைய மனிதர்களின் கதையை ஒற்றை மனிதனின் கதைக்குள் வைத்துப் பயணம் செய்திருக்          கிறோம். 

“அனைத்தையும்விட முக்கிய மாக இது போருக்கு எதிரான படம். ஆயுதங்களால் ஒருபோதும் அமைதியைக் கொண்டுவர முடி யாது. பாதுகாப்பு என்பது அன்பு மட்டும்தான்,” என்கிறார் அறிமுக இயக்குநர் அதியன் ஆதிரை.

இரும்புக்கடை தொழிலாளர் கள் பற்றிய ஒரு முக்கியப் பதிவா கவும் இந்தப் படம் இருக்குமாம். 

“இந்தத் தொழிலில் ஏராள மான குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாகச் சுட்டிக்காட்டும் அதியன் ஆதிரை, அந்தக் குழந் தைகளின் வாழ்க்கை நிலை மாற அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் உதவவேண்டும் என்ற கருத்தை இப்படத்தில் வலியுறுத்தி உள்ளாராம்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை