‘சண்டக்காரி’யாக களமிறங்கும் ஸ்ரேயா

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நடித்து அசத்துகிறார் ஸ்ரேயா. அவர் நடிப்பில் அடுத்து வெளியாகும் படம் ‘சண்டக்காரி’. 

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப் பைத் தமிழகக் கிராமங்க ளில் நடத்த உள்ளனர். 

இதில் கதைப்படி நாயகன் விமலுக்கு முதலாளியாக நடிக்கிறாராம் ஸ்ரேயா. தலைப்புக்கேற்ப அவரது கதாபாத்திரம் திரையில் சரவெடியாகக் காட்சியளிக்குமாம். 

ஸ்ரேயா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ‘நரகாசூரன்’ படத்தில் நடித்திருந்தார். 

சில பிரச்சினைகள் காரணமாக இந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. ‘சண்டக்காரி’ வெளியான பிறகு கோடம்பாக்கத்தில் தனது மதிப்பு சட்டென உயருமென நம்புகிறாராம் ஸ்ரேயா. அதனால் பட வெளியீட்டை பெரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் எனத் தகவல்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்