பார்த்திபன் நல்ல படைப்பாளி எனப் பாராட்டிய ரஜினிகாந்த்

பார்த்திபன் இயக்கி நடித்திருக்கும் ‘ஒத்த செருப்பு’ படம், ஆஸ்கர் விருது பெறும் அளவுக்கு சிறந்த படைப்பு என நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இருப்ப தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய கரு, நல்ல கருத்து, குறைந்த செலவு, நல்ல விளம்பரம் ஆகிய நான்கு அம்சங்களும் ஒரு படம் வெற்றி பெற இன்றியமையாதவை என்று குறிப்பிட்டுள்ள ரஜினி, பார்த்தி பன் தனது அருமை நண்பர் என்றும், புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர் என்றும் கூறியுள்ளார்.

“சிறிது காலம் படங்களை இயக் காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் பார்த்திபன். அவர் படம் இயக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன்.

“இப்போது ஒரே ஒரு நபர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ‘ஒத்த செருப்பு’ படத்தை எடுத்துள்ளார். 1960ஆம் ஆண்டில், இந்தியில் சுனில் தத் ‘யாதேன்’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

“அதற்கடுத்து, இந்தியாவிலேயே இரண்டாவது முயற்சியாக ‘ஒத்த செருப்பு’ உருவாகி உள்ளது. மேலும், பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது உலகிலேயே இதுவரை யாரும் செய்யாத ஒன்று. இந்தப் படம் நிச்சயம் ஆஸ்கர் விருது போட்டிக்குச் செல்லும்,”  என்று ரஜினிகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்