திடீரென நடிக்கத் தயங்கும் கீர்த்தி

திடீரென நடிக்கத் தயங்கும் கீர்த்தி

1 mins read
0ae0be03-651f-40ba-982f-4ea7a8862095
-

அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையை மையமாக வைத்து உருவாகும் படம் என்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகள் திகிலூட்டும் வகையில் இருக்குமாம். அதுமட்டுமல்ல, இப்படத்தில் கதாநாயகனும் இல்லை.

'மகாநதி' படம் வெற்றி பெற்றதையடுத்து இனி நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்துள்ளாராம் கீர்த்தி. இதனால் பெரிய நாயகர்களின் படங்களில் கூட நடிக்கத் தயங்குகிறார்.

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து திடீரென அழைப்பு வந்திருக்கிறது. ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டதுடன் தாமே அப்படத்தைத் தயாரிப்பதாகவும் அவர் கூறியதைக் கேட்ட பிறகுதான் எவ்வித தயக்க மும் இன்றி உடனடியாக கால்‌ஷீட் ஒதுக்குவதாக கூறினாராம் கீர்த்தி. இந்தப் படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.