தனுஷ் நடித்த ஆங்கிலப் படம் வெளியீடு

தனுஷ் நடித்த ஆங்கிலப் படம் வெளியீடு

1 mins read
5d04e9c7-bd7f-4075-b189-fecdc7ae3d4f
-

'தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்தில் நடித்தது, அப்படம் இந்தியாவில் வெளியீடு காண்பது குறித்து பெருமிதம் கொள்வதாகக் கூறி உள்ளார் தனுஷ்.

"என்னைக் கடினமாக உழைக்கவும், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடவும் ஊக்குவிக்கும் எனது ரசிகர்க ளிடம் இத்தகவலைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு-ஆங்கில திரைப்படமாக உருவாகி உள்ள இப்படம் 'பக்கிரி' என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இதை இயக்கியுள்ளார். இது முழு நீள நகைச்சுவைப் படைப்பாம்.

இதில் தனுசுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.