ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், அஜய்தேவ்கன், ஆலியா பட் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு 'ஆர்ஆர்ஆர்' என்ற தலைப்புடன் படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்தார்கள். பின்னர் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும்போது, 'ஆர்ஆர்ஆர்' என்பதற்கான பொருத்தமான பெயரை மக்கள் குறிப்பிட்டால் அதையே தலைப்பாக வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.
ரசிகர்கள் பலரும் அதற்கான முழு வடிவப் பெயரை படக்குழுவிற்கு அனுப்பி வைத்தார்கள். அப்படி வந்த பல தலைப்புகளில் 'ரகுபதி ராகவ ராஜாராம்' என்பதை இயக்குநர் ராஜமௌலி தேர்வு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

