'ஏழாம் அறிவு' வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

'ஏழாம் அறிவு' வில்லனிடம் பயிற்சி எடுக்கும் அருண் விஜய்

1 mins read
67bfe7ec-f2b7-4321-8d4c-106d48abd9e2
-

'தடம்' படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் தன் அடுத்த படத்திற்காக சூர்யாவின் வில்லனிடம் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார். அருண் விஜய் 'பாக்ஸர்' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிக்கிறார். விவேக் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்திற்காக சூர்யா நடித்த 'ஏழாம் அறிவு' படத்தில் வில்லனாக நடித்த ஜானியிடம் தீவிரமாக சண்டைப் பயிற்சி எடுத்து வருகிறார் அருண் விஜய்.