கவனமாக தடம் பதிக்கும் ஐஸ்வர்யா

‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்துப் பிரபல மானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி, சிபிராஜ், தினேஷ் உள்பட சில நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் மூலம் பேசப்படும் நடிகையானார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அந்தவகையில், ‘வடசென்னை’, ‘கனா’ படங்களைத் தொடர்ந்து தற்போது அவர் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அதுபற்றி அவர் ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தற்போது ஒரு படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கிறேன். அண்ணன், தங்கை பாசத்தைச் சொல்லும் படம் அது. அதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் நடிப்பதில்தான் எனக்கு ஆர்வம் அதிகமாக  உள்ளது.

“‘சாமி 2’ படத்தில் நடிக்க எனக்கு விருப்பமே இல்லை. காரணம் ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் திரிஷா நடித்த ‘புவனா’ கதாபாத்தி ரத்தில் நடிக்க மற்ற நடிகைகள் யாரும் விரும்பவில்லை. என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

“மேலும் வணிக ரீதியான படங்களில் இயக்குநர்களின் முதல் தேர்வு நான் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. இரண்டு பாட்டுக்கு ஆடிவிட்டு, நான்கு காதல் காட்சிகளில் வரும் வழக்கம் எனக்குப் பிடிக்கவில்லை. 

குறிப்பாக மரத்தைச் சுற்றி ‘டூயட்’ பாடும் சராசரி கதாநாயகியாக நடிக்க நான் விரும்பவில்லை. மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன்,” என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை