‘இளையராஜா இசையில் பாட பயம்’

‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படம் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ரம்யா நம்பீசன்.

அவருக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் ‘பீட்சா’, ‘சேதுபதி’ என்று படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

முன்னணி நாயகர்கள், புது நாயகர்கள் என்று பாரபட்சம் இல்லாமல் நடிப்பது ஏன் என்று கேட்டதற்கு, “சேதுபதி’க்குப் பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே எனக்கு  வருகின்றன. 

“இந்தப் படத்தில் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக இருந்தது. முற்றிலும் புதியவர்கள். இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். 

“அம்மாவாக நடிப்பதைவிட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். முன்னணி நடிகர்கள் படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன. 

“என்னைக் கௌரவ நடிகையாக மாற்றிவிடுவார் களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர் களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். 

“நான் தேர்ந்தெடுத்து எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வேன். தற்பொழுது விஜய் ஆண்டனியுடன் ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன்.

“அந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசை யமைக்கிறார். அவர் இசையில் எனக்குப் பாட ஆசை. ஆனால் பயமாக இருக்கிறது. ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்,” என்றார் ரம்யா நம்பீசன்.