கோபத்தில் குமுறும் பிரியா பவானி சங்கர்

கோபத்தில் குமுறும் பிரியா பவானி சங்கர்

1 mins read
1ffa318e-9908-4aa2-8f59-ae382c750300
-

சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் போலிக் கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது பிரியா பவானி சங்கருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தமக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் இவரும் எஸ்.ஜே. சூர்யாவும் ஜோடியாக நடித்த 'மான்ஸ்டர்' படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரியா பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்கு துவங்கிய விஷமிகள் அதில் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் பிரியா. "போலிக் கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகி றது. எனக்குத் தொல்லை தருவதையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.