ரஜினி ரசிகர்களின் வெறுப்பைச் சம்பாதித்த சிவகார்த்திகேயன்

“ரஜினியை முன்மாதிரியாக வைத்துதான் படங்களில் நடிக்கிறேன்,” என்று வாய் ஓயாமல் சொல்லும் சிவகார்த்திகேயன் தன்னுடைய ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் ரஜினியையே கலாய்த்தது ரஜினி ரசிகர்களை கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்தில் “போராட்டம் போராட்டம் எனப் போராடிக்கொண்டே இருந்தால் நாடு சுடுகாடாகிவிடும்,” என்று ரஜினி முன்பு மேடையில் பேசியதைக் கலாய்க்கும் விதமாக அதே வசனத்தை இந்தப் படத்தில் சிவகார்த்தி கேயன் பேசியிருப்பார். 

அதனால்தான் ரஜினி ரசிகர் கள் “ரஜினியை முன்மாதிரியாக வைத்து வளர்ந்துவிட்டு அவரையே கலாய்க்கலாமா?”, என்று சிவகார்த்திகேயனைத்  திட்டி, இணையங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இதற்கிடையில் தற்போது ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்தி கேயன். 

இந்தப் படத்தில் சிவகார்த்தி கேயனுக்கு ஜோடியாக நடிக்க பாண்டிராஜ் முதலில் அணுகியது பூஜா ஹெக்டே அல்லது ‘கீதாகோவிந்தம்’ தெலுங்குப் படத்தின் நாயகியான ராஷ்மிகா விடம்தான்.

அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தங்கச்சி வேடத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கிறது.

நாயகி கதாபாத்திரத்திற்கு அதிகக் காட்சிகள் இல்லை  என்பதாலும் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் படங்கள் அனைத்தும் தோல்விப் படங்களாக இருப்பதாலும் அவர்கள் நடிக்க மறுத்து விட்டனர் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. 

இவர்கள் மறுத்த பிறகே அனு இம்மானுவேலை கதா நாயகியாக்கியுள்ளனர் என்கின் றனர் படக்குழுவினர். 

தற்பொழுது சிவகார்த்திகேயன் கட்டாயம் ஒரு வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவனமாக நடித்து வருகிறார்.

2019-05-25 06:10:00 +0800

இப்பகுதியில் மேலும் செய்திகள்

குழந்தைகள் ரியான், ரஹில் ஆகியோருடன் ஜெனிலியா, ரிதி‌ஷ் டெ‌ஷ்முக் தம்பதியர். படம்: ஊடகம்

20 Sep 2019

ஜெனிலியா: வயது பற்றி கவலையில்லை