ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வரும் அனுஷ்கா

ரசிகர்களை ஆச்சரியப்படுத்த வரும் அனுஷ்கா

1 mins read
0600c2ed-e87a-4e44-943e-79ab9c062bcf
-

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு 'பாகமதி' படத்தில் நடித்தார் அனுஷ்கா. அந்தப் படத்திற்குப் பிறகு ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் படம் 'சைலன்ஸ்'. அவருடன் 'ஹாலிவுட்' நடிகர் மைக்கல் மேட்ஸன், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடிக்கிறார்கள்.

'திரில்லர்' மற்றும் மனோதத்துவக் கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறது. அனுஷ்கா இதுவரை எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தபோதும் இந்த 'சைலன்ஸ்' படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களுக்குப் பெரிய ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறது படக்குழு.