எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தன் மனதில் பட்ட கருத்துகளை வெளிப் படையாகச் சொல்வதற்குத் தயங்காதவர் நடிகை ரம்யா நம்பீசன்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'நட்புனா என்னானு தெரி யுமா' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அறிமுக நாயகன் கவினுடன் நடித்துள்ளார்.
ரம்யா திரையுலகுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்ப முடியவில்லை. தமிழில் அறிமுகமாகி 15 ஆண்டுகளாகி விட்டதாக சுட்டிக்காட் டிச் சிரிக்கிறார்.
"தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்து முடித்திருக்கிறேன். தமிழில் இடைவெளி ஏற்பட்டதற்குக் காரணம் உள்ளது.
"சேதுபதி' படத்துக்குப் பிறகு நான் கேட்ட பல கதைகள் திருப்தி அளிக்க வில்லை. பெரும்பாலான இயக்குநர்கள் இரண்டு அல்லது நான்கு குழந்தை களுக்கு அம்மாவாக நடிக்கவே அழைத்த னர். என்னைப் பற்றிய இந்த எண்ணம் மாறவேண்டும் என்பதற்காக காத்திருந் தேன். அப்போது இயக்குநர் சிவா அர விந்த் தேடி வந்து 'நட்புனா என்னான்னு தெரியுமா' கதையைச் சொன்னார்.
"அதைக் கேட்கும்போதே சுவாரசிய மாக இருந்தது. ரம்யாவால் அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் மிளிர முடியும் என்பதை நிரூபிக்க இந்தப் படம் கைகொடுத்தது. தவிர இந்தக் குழுவில் இருந்த அனைவருமே இளையர்கள் என்பதால் சகஜமாகப் பேசிப் பழகி ஜாலி யாகப் படப்பிடிப்பை நடத்த முடிந்தது," என்கிறார் ரம்யா.
நட்பின் அடிப்படையில் நட்புக்காக இவர் எதையும் விட்டுக் கொடுப்பாராம். இயக்குநர் சிவா அரவிந்த் கூறிய கதை யின் பல்வேறு இடங்கள் தனது இயல்பு டன் ஒத்துப் போயிருந்ததாகச் சுட்டிக் காட்டுகிறார்.
நல்ல நடிகை என்று பெயரெடுத்தாலும் ரம்யாவை அதிக படங்களில் பார்க்க முடியவில்லை என்பது உண்மை. அதே சமயம் சம்பள விஷயத்தில் இவர் அவ் வளவாக கறார் காட்டுவதில்லை.
"புதிய நாயகர்களின் படங்கள் என்றால் பெரும்பாலும் மனைவி வேடமே அமைகிறது. அதேசமயம் புதுமுகங்களுடன் நடிக்கும்போது வித்தியாசமான பாத்திரங்கள் கிடைக்கின்றன. நான் எதையும் வணிகரீதியில் அணுகுவ தில்லை. இப்படத்தில் நடித்தால் லாபம், அப்படத்தில் நடித்தால் கூடுதல் சம்பளம் என்றெல்லாம் கணக்குப் போடமாட்டேன்.
"ஒரு கதையைக் கேட்கும் போது எனக்குள் அது ஆர் வத்தைத் தூண்டவேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே எதிர்பார்ப்பு. எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் நான் அதைக் கொண்டாட வேண்டும்.
"அப்படிப்பட்ட கதை களை மட்டுமே தேர்வு செய்கிறேன்.
"ஒரு கதையைக் கேட்கும்போது எனக்குள் குழப்பம் ஏற்பட்டால் அதே அனுபவம் ரசிகர் களுக்கும் ஏற்படும் என நம்புகிறேன். எனவே, ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் கதை களைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே எனது விருப்பம்."
அடுத்து விஜய் ஆண்டனியுடன் நடிக்கிறார் ரம்யா. இதில் காதலி, மனைவி, தாய் என மூன்று விதமான தோற்றங்கள் உள் ளனவாம். இப்படிப் பட்ட கதைகளையே விரும்புவதாகச் சொல்கிறார்.

