போராடி வெல்லும் விவசாயியின் கதை

போராடி வெல்லும் விவசாயியின் கதை

1 mins read
d35558b8-812f-4c7e-840d-9f1d8feb06fd
'ஐ.ஆர். 8' படத்தில் பிந்து, அனீபா. -

விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாகிறது 'ஐ.ஆர்.8'. 'சிங்கமுகம்', 'வாங்க வாங்க' ஆகிய படங் களை இயக்கிய என்.பி.இஸ்மாயில் இப்படத்தை இயக்குகிறார்.

தற்போது தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை நிலை யையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் இப்படம் வெளிச்சம் போட்டு காட்டும் என்கிறார் இயக்குநர்.

"ஒரு விவசாயி தனது நிலத் தில் விவசாயம் செய்ய முடியாமல், வங்கியில் பெற்ற கடனை திருப் பிச் செலுத்தமுடியாமல் பரிதவிக் கிறார். அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை. பெற்ற பிள்ளை களும் கூட ஒதுங்கி நிற்கின்றனர். இதனால் வீட்டில் வறுமை தாண்டவமாடுகிறது.

"எந்தச் சூழ்நிலையிலும் விவ சாயத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் அந்த விவ சாயி உறுதியாக இருக்கிறார். படித்த இளைஞர்களின் உதவி யுடன் அனைத்து பிரச்சினை களையும் எதிர்த்து போராடி, இறுதியில் வெற்றி பெறுகிறான் அந்த விவசாயி. எனவேதான் இப்படத்துக்கு இந்த தலைப்பை வைத்தோம்," என்கிறார் இயக்கு நர் இஸ்மாயில்.

அனீபா, விஷ்வா கதாநாயகர் களாகவும் பிந்து கதாநாயகி யாகவும் நடித்துள்ளனர். சேலம் அருகே உள்ள தீர்த்தமலை, வேட கட்டுமடுவு கிராமங்களில் படப் பிடிப்பு நடைபெற்று வருகிறது.