நாயகர்களின் மதிப்பு குறைகிறது

தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் களுக்கு இடையேயான போட்டி அதி கரித்துள்ளது. இந்தப் போட்டியால் தமிழ் சினிமா வளர்ச்சி காணும் என்கின்றனர் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள். 

கடந்த சில ஆண்டுகளாக முன் னணி நடிகர்களின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாகவும் இதன் விளைவாக புதிய நடிகர்கள் அறிமுகமாகி வருகிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். 

குறிப்பாக சின்னத் திரையில் வெற்றி பெற்று திரையுலகில் கால் பதித்தவர்கள்,  சில ஆண்டு களுக்கு முன்பு திரைப்படங் களில் சாதாரண துணை நடிகராக நடித் தவர்கள் எல்லாம் இப்போது பெரிய நாயகர் களாக வலம் வரு கின்றனர். விஜய் சேதுபதி, சிவ கார்த்திகேயன், ‘சரவணன் மீனாட்சி’ தொலைக் காட்சி தொடர் புகழ் கவின் ஆகியோர் இப்பட்டிய லில் உள்ளனர். 

இதனால் இவர் களுக்கு முன்பு கோடம் பாக்கத்தில் அறிமுகமான சில நாயகர்கள் போது மான படவாய்ப்பின்றி தவிக்கின்றனர். 

அது மட்டுமல்லாமல் தனுஷ் உள்ளிட்ட இதர நாயகர்களும் புது, இளம் நடிகர்களின் வரவால் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களது படங்கள் முன்பு போல் பெரிய தொகைக்கு வியாபாரம் ஆவ தில்லை. எனவே, தயாரிப்பாளர்கள் முன்புபோல் இவர்கள் கேட்கும் சம்ப ளத்தை அள்ளிக்கொடுப்பதில்லை. 

மாறாக, அறிமுக நடிகர்கள், குறைவான சம்பளம் கேட்கும் புது நாயகர்களை நம்பி முதலீடு செய் கிறார்கள். ஒருவேளை படம் தோல்வி கண்டாலும் தயாரிப்பாளர்களுக்குப் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது. இதேபோல் குணசித்திர, நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் புதிது புதிதாக பலர் அறிமுகமாகி வருகின்றனர். 

இனிமேல் நடிகர் நடிகைகள் பெரும்தொகையைச் சம்பளமாகக் கேட்க இயலாது. அதேபோல் எந்த வொரு நடிகரும் நடிகையும் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்கள் தங்களுக்குத் தான் கிடைக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கமுடியாது. புதியவர்களின் வரவால் எல்லாம் மாறிவிட்டது.  

ரோபோ சங்கர், பாலசரவணன்,  ஆர்.ஜே. பாலாஜி என்று நகைச் சுவையில் அசத்த பலர் வந்துள்ளனர். வேல. ராமமூர்த்தி அழகம்பெருமாள், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் குணசித்திர வேடங்களில் அசத்து கிறார்கள். புதிய வில்லன் நடிகர் களையும் காணமுடிகிறது. மொத் தத்தில் தமிழ்ச் சினிமா ஆரோக் கியமான பாதைக்குத் திரும்பியுள்ளது என்கிறார்கள்  விவரப்புள்ளிகள்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon