தனக்குத் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக வெளியான செய்தியை வதந்தி என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
தனது திருமணம் குறித்த சில வதந்திகள் தன் காதுகளை எட்டியிருப்பதால் அதுகுறித்து விளக்கமளிப்பதாக அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
தற்போது திருமணம் குறித்து திட்டம் ஏதுமில்லை என்றும் இதுதொடர்பாக ஏதேனும் முடி வெடுத்தால் அதுகுறித்து தாமே உரிய நேரத்தில் அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தொழில் ரீதியாகவும் சில படங்களுடன் என்னைத் தொடர்புபடுத்தி நிறைய வதந்திகள் வருவதை நான் அறிவேன். ஒரு நடிகராக சிலபல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தால் சில தயாரிப்பாளர்களை நான் சாதாரணமாக சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
"இதனால் நான் பட வாய்ப்புக்காக சந்தித்தேன் என்று அர்த்தமல்ல. சில வதந்திகளை உண்மை என நம்பும் ரசிகர்கள் அவை நடக்காமல் போகும்போது அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர்," என்று சிம்பு கூறியுள்ளார். தாம் நடிக்கும் படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்களே விவரங்களை அறிவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

