நடிகர் சிம்பு அண்மையில் லண்டனுக்குச் சென்று ஒரு சில மாதங்கள் கடுமையான உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். குறளரசனின் திருமண புகைப்படங்களில் சிம்பு ஒல்லியாக இருந்தார். ஆனால் உடற்பயிற்சிக்குப் பின்னர் சிம்பு உணவுக் கட்டுப்பாடு இல்லாததால் மீண்டும் குண்டாகிவிட்டார்.
நேற்று முன்தினம் ஹன்சிகாவின் 50வது படமான 'மகா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்புவின் புகைப்படங்கள் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்களில் சிம்பு மீண்டும் குண்டாகிவிட்டதை அறிந்து இணையப் பயனாளர்கள், "இதுதான் உடம்பைக் குறைத்த லட்சணமா?" என்று இணையத்தில் கிண்டல் செய்து பதிவிட்டு வருகிறார்கள்.

