சவாலில் இறங்கி இருக்கும் காஜல்

உடற்பயிற்சியை ஒரு நாள்கூட விடாமல் 100 நாள் தொடர்ந்து செய்ய வேண்டி ‘100 நாள் சவால்’ என்ற ஒன்று அண்மையில் வெளியானது. அந்த சவாலில் இப்போது நடிகை காஜல் அகர்வாலும் அதில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். வயது ஆக ஆக, நடிகைகளும் அவர்களது இளமையைப் பராமரித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். அப்போது தான் புதிதாக வரும் இளம் நடிகைகளுடனும் போட்டிப் போட முடியும். அப்படி உடற்பயிற்சி செய்வதால்தான் காஜல் அகர்வால், நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்ற நடிகைகள் இன்னமும் முன்னணி நடிகைகளாக இருந்து வருகிறார்கள்.

கடந்த சில படங்கள் வரை கொஞ்சம் உடம்பு பூசினாற்போல இருந்த காஜல் அகர்வால் தற்போது தன் உடல் எடையைக் குறைத்து ஒல்லியாகத்தான் இருக்கிறார். இருப்பினும் நேற்று முன்தினம் முதல் இந்த 100 நாள் சவாலில் அவரும் இறங்கியுள்ளார். பயிற்சியாளர் ஒருவர் மேற்பார்வையில் அவர் இந்தச் சவாலை ஆரம்பித்துள்ளார். 

இது குறித்து காஜல் அகர்வால் தன்னுடைய ‘இன்ஸ்டாகிரா’மில் தெரிவித்துள் ளதாவது, “என்னுடைய உடலை மாற்றுவதற்காக நானும் 100 நாள் சவாலில் இறங்கியுள்ளேன். என் பயிற்சியாளர் ஒவ்வொருவரின் உடல் எப்படிப்பட்டது? அவர்கள் என்ன மாதிரியான உணவை உண்ண வேண்டும்? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதைப்பற்றி நன்கு அறிந்தவர். அவருடைய மேற்பார்வையில் நான் இந்த முயற்சியில் இறங்கி இருக் கிறேன்,” என்று பயிற்சியாளரைப் பற்றிப் புகழ் பாடியுள்ளார்.

இவருடைய நடிப்பில் தமிழில் வெளிவர இருக்கும் படம் ‘பாரிஸ் பாரிஸ்’.  இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து காஜல் அகர்வால் கூறுகையில், “ரசிகர்களைவிட, கங்கணாவின் நடிப்பிலிருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை. கண்ணை மூடி எந்தக் காட்சியை யோசித்தாலும் அவர் எப்படி நடித்தார் என்பது நினைவில் வரும். அந்தக் கட்டத்தைத் தாண்ட வேண்டியிருந்தது.

“‘குயின்’ படத்தில் இருக்கும் உணர்வுகள் பொதுவானவை. ஒரு பெண் கைவிடப்படுகிறாள், மனமுடை கிறாள், மன அழுத்தம், நிராகரிப்பு எல்லாவற்றையும் சந்திக்கிறாள். எல்லாம் உணரும்போது அவள் போராடி மீண்டு வருகிறாள். 

“இந்தக் கதாபாத்திரத்தின் வளர்ச்சியை எல்லோராலும் தொடர்பு படுத்தி உணரமுடியும். அதனால் என் பார்வையில் அந்தக் கதாபாத் திரத்தைப் பார்த்து என் பாணியில் நடிக்க முயற்சி செய்துள்ளேன்,” எனக் கூறியுள்ளார் காஜல் அகர்வால்.

இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon