அலைக்கு எதிராக நீந்தினால் தோல்வியே: ரஜினி

இந்தியப் பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி உண்மையிலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிதான் என்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஒரு கட்சியின் வெற்றியை தேசியத் தலைவர்கள் மட்டுமின்றி மாநிலத் தலைவர்களும் நிர்ணயிப்பதாகவும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைத் தவிற மற்ற மாநிலங்களில் மோடிக்கு ஆதரவான அலை வீசுவதாகக் கூறிய ரஜினி, ஒரு அலை வீசும் சூழலில் அதற்கு எதிராக யாரும் நீந்த இயலாது என்றார். “அலையின் போக்கோடு நீந்திச் செல்பவர்களே வெல்வார்கள்,” என்று அவர் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் திட்டங்கள், நீட் மருத்துவக்கல்விக்கான நுழைவுத் தேர்வு, எதிர்க்கட்சிகளின் கடுமையான கொள்கை பிரசாரம் ஆகியவற்றால் பாரதிய ஜனதா கட்சி தோற்றதாக தாம் நினைப்பதாக ரஜினி கூறினார். அத்துடன், முதன்முறையாகக் கலந்துகொண்ட தேர்தலில் கிட்டத்தட்ட நான்கு விழுக்காடு வாக்குகளைப் பெற்ற நடிகர் கமலஹாசனுக்குத் தமது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக ரஜினி சொன்னார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூழ்நிலை எதிராக இருப்பதாகவும் அதற்காக அவர் பதவி விலக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon