கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. தனியார் தொலைக்காட்சி புகழ் ரியோ ராஜ், ஷிரின் சன்ஜ்வாலா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர். இதை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அடுத்த மாதம் திரை காண உள்ள இப்படத்துக்குத் தணிக்கைக் குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது.
ராதாரவி, விக்னேஷ்காந்த், அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் யூடியூப் மூலம் பிரபலமான சிலரையும் இப்படத்தில் காண முடியும். ரியோ ராஜ் தனது நகைச்சுவையுடன் கூடிய பாந்தமான நடிப்பால் நிச்சயம் ரசிகர்களைக் கவர்வார் என்கிறார் இயக்குநர். ரியோ ராஜ் இயல்பாகப் பேசி நடிக்கக்கூடிய திறமைசாலி என்பதால் அவர் இடம்பெறும் படங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டி உள்ளார். இதனால் படக்குழுவினர் உற்சாகத்தில் மிதக்கின்றனர். திரைப்படங்களில் நடித்தாலும், வழக்கம் போல் தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார் ரியோ ராஜ்.