போஸ் வெங்கட் இயக்கிய முதல் திரைப்படம்

போஸ் வெங்கட் இயக்கிய முதல் திரைப்படம்

1 mins read
0506c17b-125f-4ea3-889c-16ce1587cca6
-

விரைவில் திரைகாண உள்ளது 'கன்னிமாடம்' திரைப்படம்.

பிரபல குணச்சித்திர, வில்லன் நடிகர் போஸ் வெங்கட் இப்படத் தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மொத்தம் 35 நாட்களிலேயே படப்பிடிப்பை திட்டமிட்டபடி கச்சி தமாக முடித்துள்ளாராம். இதை யடுத்து பின்னணி இசை சேர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்பப் பணி கள் துரித கதியில் நடந்து வரு கின்றன.

தயாரிப்பாளரின் ஒத்துழைப்பு இல்லாமல் 35 நாட்களில் படப் பிடிப்பை முடித்திருக்க இயலாது என்கிறார் போஸ் வெங்கட்.

'கன்னிமாடம்' படத்தின் கதைக்களம் சென்னைதானாம். இம்மாநகரத்தை நம்பி வரும் இளையர்களின் வாழ்க்கையை இப்படத்தில் பதிவு செய்துள்ளனர்.

"என் தயாரிப்பாளர் ஹ‌ஷீரின் படைப்பு சுதந்திரத்தில் தலையிட வில்லை. இந்தப் படம் சென்னை என்றால் என்ன? அந்நகரம் எப்படிப்பட்டது? என்பதை தெளி வாக வரையறுக்கும்.

"சாதிக்க நினைக்கும் கனவுக ளோடு சென்னைக்கு வரும் இளைஞர்களை பற்றிய கதை இது.

"மேட்டுக்குப்பம், விஜயராகவ புரம், சூளைமேடு ஆகிய இடங்களில் அவர்கள் தங்குவது வழக்கம். எனவே இந்தப் பகுதிக ளில் முக்கிய காட்சிகளைப் பட மாக்கி உள்ளோம்.

"ஸ்ரீராம், காயத்ரி ஆகிய இருவரும் கதாநாயகன், நாயகி யாக நடித்துள்ளனர். தொழில்நுட் பப் பணிகள் முடிவடைந்த பின்னர் படம் விரைவில் திரை காணும்," என்கிறார் போஸ் வெங்கட்.

'கன்னிமாடம்' படப்பிடிப்பின் நிறைவு நாளை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்.