நடிகர் ஜெய் அடுத்து எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இதில் அவருக்கு இரண்டு நாயகிகள் ஜோடியாக நடித்துள்ளனர்.
சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சி. ஐஸ்வர்யா தத்தா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். எஸ்.ஏ.சி.தான் தயாரிக்கிறார்.
ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட 'நீயா-2' படத்திலும் அவருக்கு கேத்தரின் தெரேசா, ராய் லட்சுமி ஆகிய இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப் புதுப்படத்திலும் எஸ்ஏசி படைப்புகளில் இருக்கும் வழக்கமான அம்சங்கள் இருக்குமாம். அதேசமயம் அவை அனைத்தும் இன்றைய இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

