நயன்தாரா படத்தில் தமன்னா நடனம்

நயன்தாரா படத்தில் தமன்னா நடனம்

1 mins read
03a1078a-b910-4683-8443-98d9e094f38f
-

என்னதான் நடிகைகளுக்கு மத்தியில் மறைமுகப் போட்டி இருந்தாலும் ஒருசில கதாநாயகிகள் இடையே நல்ல நட்பும் இருக்கவே செய்கிறது. ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாகவும் நடந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் படத்தில் தமன்னா ஒரு பாடலுக்குக் குத்தாட்டம் போடுகிறாராம்.

'சைரா நரசிம்ம ரெட்டி' என்ற தலைப்புடனும் சரித்திரப் பின்னணியுடன் உருவாகும் இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இதில்தான் தமன்னா படுகவர்ச்சியாக நடனமாட இருப்பதாகத் தகவல். ஹைதராபாத்தில் உள்ள ஒரு படப்பிடிப்பு அரங்கில் குறைந்தபட்ச தொழிலாளர்களின் உதவியோடு இப்பாடல் காட்சியைப் படமாக்க உள்ளனர். இப்படம் ரூ.200 கோடி செலவில் உருவாகிறது.