பள்ளி மாணவனாக ஜெயம் ரவி

பள்ளி மாணவனாக ஜெயம் ரவி

2 mins read
16bfacfb-d3c4-4403-9e45-929f4b5d4a10
-

ஜெயம் ரவியின் 24வது படம் 'கோமாளி'. இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள், வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். இது உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை இளைஞர்களின் மனநிலை எப்படி இருந்தது என்பதை கூறும் மனரீதியான படம். இதில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடிக்கிறார். ஆதிவாசி, இளவரசன், நோயாளி, விஞ்ஞானி, பள்ளி மாணவன் ஆகியவை அவற்றில் முக்கியமான வேடங்கள்.

இதில் ஜெயம் ரவி பள்ளி மாணவனாக நடிக்கத் தனது எடையை 20 கிலோ வரை குறைத்து நடித்துள்ளார். எடை குறைக்க 3 மாதங்கள் அவர் எடுத்துக் கொண்டார். தற்போது மீண்டும் உடல் எடையை அதிகரித்து 25வது படத்திற்கு தயாராகி வருகிறார். பள்ளி மாணவன் வேடத்திற்கு ஜெயம் ரவி 20 கிலோ எடை குறைத்ததைப் பலரும் நம்பாததால் அவரின் படத்தை வெளியிட்டு அசத்தி உள்ளனர் படக் குழுவினர். இணையதளங்கில் ஜெயம் ரவியின் பள்ளி மாணவன் படத்தை பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலை எப்படியாவது படமாக்க வேண்டும் என்ற தீவிரத்தில் இருக்கிறார் இயக்குநர் மணி ரத்னம். நீளமான கதை என்பதால் இரு பாகங்களாக அந்தப் படத்தை எடுக்கவேண்டும் என்று அவர் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படுகிறது.

முதல் பாகத்தில் நடிக்க விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாபச்சன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி சம்மதமும் பெற்று விட்டார்.