'சாஹோ' படத்தில் இசை பிரபலங்கள் வெளியேறியதால் ஜிப்ரானுக்கு வாய்ப்பு

'சாஹோ' படத்தில் இசை பிரபலங்கள் வெளியேறியதால் ஜிப்ரானுக்கு வாய்ப்பு

2 mins read
410d140e-5cd3-4128-af1d-6dc1260b0006
-

சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சாஹோ' படத்திற்கு இசையமைக்கவிருந்த மூன்று இசையமைப்பாளர்கள் படத்திலிருந்து விலகியதால் ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

'பாகுபலி' வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'சாஹோ'.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர்களாக ஒப்பந்த மாகி இருந்த சங்கர், எஸ்ஸான், லாய் ஆகியோர் படத்திலிருந்து சில பிரச்சினைகளால் விலகினர். இதையடுத்து இந்தப் படத்திற்கு இசையமைக்க வேறு இசையமைப் பாளர்களைப் படக்குழு தேடி வந்தது.

இந்த நிலையில் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்ப தாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஜிப்ரான் பின்னணி இசையை மட்டும் கவனிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாடல்களுக்கு வேறு சில இசையமைப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்துவருகிறதாம்.

சுஜீத் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக ‌ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஏமி ஜாக்சன், மந்த்ரா பேடி, ஜாக்கி ஷெராப், லால், மகேஷ் மஞ்ரேக்கர், சங்கி பாண்டே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக் கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து இருக்கின் றனர்.

'யுவி கிரியே‌ஷன்ஸ்' சார்பில் வம்சி, பிரமோத் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் துபாயில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.