விரைவில் திரை காண இருக்கும் 'சிந்துபாத்'

விரைவில் திரை காண இருக்கும் 'சிந்துபாத்'

1 mins read
479c595d-3905-44a4-945b-691884d730d4
விஜய் சேதுபதியின் மகன் சூர்யா -

அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'சிந்துபாத்'. அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அறிமுகமாகிறார். யுவன் சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.

மே மாதம் 16ஆம் தேதியே இப்படம் வெளியாக இருந்த நிலையில், சில பிரச்சினைகளால் இந்தப் படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் 'சிந்துபாத்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையைக் 'கிளாப் போர்டு புரொடக்சன்ஸ்' சத்யமூர்த்தி வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமாக ஒரு சுவரொட்டியில் தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

இதையடுத்து விரைவில் வெளியீடு தேதி தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இப்படத் திலிருந்து 'ராக்ஸ்டார் ராபர்' என்ற பாடலை நேற்று வெளியிட்டனர்.