சுடச் சுடச் செய்திகள்

‘ஆயிரத்தில் ஒருவன் 2’  

தமிழ்த் திரையின் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘என்ஜிகே’ திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில், “புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்க யோசித்தேன். ஆனால் அதைக் கைவிட்டு கார்த்தியை வைத்து ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன்.

இதற்கான கதை தயாராகிவிட்டது. சோழ மன்னர்களின் வரலாற்று நிகழ்வுகள் இந்தப் படத்திலும் பதிவு செய்யப்படும். அரசியல் தலைவர்களில் எனக்கு எம்.ஜி.ஆரை மிகவும் பிடிக்கும். அவரது வாழ்க்கையைப் படமாக்க வாய்ப்புக் கிடைத்தால் கட்டாயம் செய்வேன்,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon