கன்னடத்தில் உருவாகி தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் கடந்த ஆண்டு வெளியான படம் 'கேஜிஎப்'. யஷ் கதாநாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
படம் 1970 - 1980களில் நடக்கும் கதை என்பதால் படத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரமும் உள்ளது. இந்த வேடத்தில் பிரபல இந்தி நடிகை ரவீணா டாண்டன் நடித்து வருகிறார். இவர் தமிழில் அர்ஜுனுடன் 'சாது', கமலுடன் 'ஆளவந்தான்' படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

