சுடச் சுடச் செய்திகள்

சிம்புவுடன் ஆடிப் பாடிய ஹன்சிகா

தனது முன்னாள் காதலி களுடன் எந்தவித விருப்பு, வெறுப்புமின்றி நடிப்பவர் சிம்பு. இது அவரது தனித்தன்மை. நயன்தாராவை பிரிந்தபிறகு ‘இது நம்ம ஆளு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித் தார். இப்போது அடுத்த காத லியான ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார். 

ஹன்சிகாவின் 50வது படமான ‘மகா’வில் சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்து வருகின்றனர். தற்போது கோவாவில் இப்படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து இப்படத் தயாரிப்பாளர் மதியழகன் கூறியபோது, “படப்பிடிப்பு தொடர்ந்து வருகிறது.

படப்பிடிப்பில் சிம்பு, ஹன்சிகா இருவரும் ஆடல், பாடல் என கொண்டாட்டமாக உள்ளனர். அத்துடன் சண்டை, காதல் காட்சிகள், கொண்டாட்டம், காதல் பிரிவு, திரும்பவும் சேர்வது போன்ற காட்சிகளும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. சிம்பு பற்றி வெளியில் கூறிய தில் இருந்து அவர் முற்றிலும் வித்தியாசமான நல்ல மனிதராக இருக்கிறார் என்பதே எங்கள் அனுபவம்,” என்றார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon