பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த வடிவேலு, ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தி நடித்ததன் தாக்கம் காரணமாக இன்றளவும் அவரை சினிமா ரசிகர்களால் மறக்கமுடியாத நடிகராக மனதில் நிலைத்துள்ளார்.சில பிரச்சினைகளால் புதிய படங்களில் வடிவேலு நடிக்கவில்லை என்றாலும் அவர் இல்லாத சமூக வலைத்தள மீம்ஸ் களே இல்லை எனலாம்.
இப்படி இருக்க தற்போது 'நேசமணியைக் காப்பாற்றுங்கள்' என்ற ஹேஷ்டேக் உலகளவில் பிரபலமாகி வருகிறது. உலகளவில் 'பிரே ஃபார் நேசமணி' என்ற ஹேஸ்டேக் புகழ்பெற்றது குறித்து வடி வேலுவிடம் கேட்டபோது, "அது போன்ற பாத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது ஆண்டவன் தனக்கு அளித்த பரிசு," என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரம் ஒன்றுக்கு அடிபட்டுவிட்டதாகவும் அவருக் காக பிரார்த்திக்கும்படியும் வேடிக்கையாகச் சமூக வலைத் தளங்களில் துவங்கிய பிரசாரம் உலகளவில் பிரபலமானது. ஃபேஸ்புக்கில் உள்ள 'Civil Engineers Learners' என்ற பக்கத்தில் கடந்த 27ஆம் தேதி யன்று சுத்தியல் ஒன்றின் படத்தைப் போட்டு, இதை உங் கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் என கேட்கப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் கீழ் துபாயில் வசிக்கும் தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், "இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களா வில் வேலை பார்க்கும்போது நேச மணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்," எனக் குறிப்பிட்டிருந்தார்.
'ஃப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி.

