சாய் பல்லவி: கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்

சாய் பல்லவி: கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்கமாட்டேன்

3 mins read
48c5dfa6-bf3a-479b-a0b7-909558fbaa55
சாய் பல்லவி -

இன்றைய நிலையில் தென்னிந்திய ரசிகர் களின் கனவுக்கன்னியாக விளங்கி வரும் சாய் பல்லவி, "என் மனதுக்கு சரி என்று தோன்றாத எந்தக் காரியத்திலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடுபடமாட்டேன், அதில் விளம்பரப் படத்தில் நடிப்பதும் அடங்கும்," என்று கூறியுள்ளார்.

"நான் பணத்துக்கு ஆசைப்படவில்லை, ஆசைப்படவும் மாட்டேன்.

"நான் சாப்பிடுவதோ கொஞ்சம் சோறும் மூன்று சப்பாத்தியும்தான். இதற்குமேலும் நான் கோடிக்கணக் கில் பணத்தைச் சம்பாதித்து என்ன செய்யப்போகிறேன்.

"நான் ஏன் எனக்கு அனுபவ மில்லாத பொருட்களைப் பற்றி பொய்யாக விளம்பரப்படுத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும்?

"அதனால்தான் விளம் பரப் படத்தில் நடிப்பதற்காக எனக்குக் கொடுத்த ரூ.2 கோடி பணத்தை நிரா கரித்துவிட்டேன்," என் கிறார் சாய் பல்லவி.

மலையாளப் பட மான 'பிரேமம்' படத் தில் அறிமுகமான சாய் பல்லவியின் அழகிய முகம், சிரிப்பு, நடனத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, சினிமா மீதான தீராத காதலால் நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்கு வந்த வாய்ப்பை அவர் வேண்டாம் என்று தட்டிக் கழித்துள் ளார்.

அழகை மேம்படுத்தும் 'ஃபேர்னஸ் க்ரீம்' ஒன்றை முகத்தில் பூசிக்கொண்டால் வெளிநாட்டவர்கள் போல் நாமும் வெள்ளையாக மாறிவிடலாம் என்பதை பிரபலப்படுத்துவதே விளம்பரத்தின் உத்தி.

இதுகுறித்து விளக்கமளித்த சாய் பல்லவி,

"நான் அழகு கிரீம் எதையும் பயன்படுத்துவ தில்லை. இயற்கை மூலம் கிடைக்கும் மூலி கைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன்.

"இந்தியர்கள் நிறம் இதுதான். இந்தியர் களாக இயல்பாகவே இருக்கலாம். நாம் ஏன் வெளிநாட்டவர்களைப் போல் மாறவேண்டும். அவர்களின் நிறம் வெண்மை என்றால், நம் நிறம் கறுப்பு. ஆப்பிரிக்கர்களும் கறுப்பு நிறத்தில் தான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள்தான் அழகாக இருக்கின்றனர்.

"எப்போதுமே இயற்கை அழகுதான் பேரழகு. இயற்கை மூலம்தான் எல்லா பிரச்சினைகளுக் கும் தீர்வு கிடைக்கும் என நம்புகிறவள் நான். அப்படி இருக்கும்போது ரசாயனப் பொருட் களுக்கு ஆதரவாக மனசாட்சியை விற்றுவிட்டு செயல்பட முடியாது. எத்தனை கோடி கொடுத் தாலும் அது எனக்கு வேண்டாம்.

"எனக்குத் தெரிந்தது எல்லாம் என் பெற் றோர், சகோதரி பூஜா மற்றும் நண்பர்கள்தான்.

"என் சகோதரிக்கு நான் அவளை விட நல்ல நிறத்துடன் இருக்கிறேன் என்று வருத் தம். என்னைவிட ஐந்து வயது இளையவள் அவள். அதிகமாக பழங்கள், காய்கறிகள் சாப்பிடவேண்டும் என்று கூறுவேன்.

"நான் வீட்டில் மூன்று சப்பாத்தி, சாதம்தான் சாப்பிடுவேன். ஆடம்பரமில்லாத வாழ்க்கை வாழ்கிறேன். அதனால்தான் அனுபவமில்லாத 'ஃபேர்னஸ் க்ரீம்' விளம்பரத்தில் நடிக்கவில்லை. இதில் வரும் வருமானமும் தேவையில்லை," என அதிரடியாகக் கூறியுள்ளார் சாய் பல்லவி.

இந்நிலையில் இப்போது குளிர்பான விளம் பரம் ஒன்றுக்காகவும் சாய் பல்லவியை அணுகிய போது, அந்த வாய்ப்பையும் மறுத்துள்ளார்.

இதற்கிடையே தனது குரல் ஆண் குரலாக இருக்கிறது என்றும் அவர் வருத்தப்பட்டுள்ளார்.

"எனது குரல் குறித்து கூட பல நேரங்களில் பயந்துள்ளேன். திரையுலகில் நிலைக்க முடி யுமா? என்ற சந்தேகம் இருந்தது. என் குரல் இன்றும் ஆண் குரல் போன்றுதான் இருக்கும். தொலைபேசியில் பேசும்போது, "தொலைபேசியை கொஞ்சம் உங்களது மேடத்திடம் கொடுங்கள்," என்று என்னிடமே எதிர்திசையில் உள்ளவர்கள் கூறியதுண்டு என்று வெளிப்படையாகக் கூறி யுள்ளார் சாய் பல்லவி.