'ஆடுகளம்' படத்திற்குப் பிறகு 'கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிடுவதன் மூலம் தனுசும் டாப்சியும் மீண்டும் இணைந்துள்ளனர்.
'மாயா', 'இறவாக்காலம்' படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்சியை வைத்து 'கேம் ஓவர்' என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அண்மையில் வெளியான படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஜூன் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டாப்சி வித்தியாசமான கேம்களைத் தயாரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ரான் ஈதன் யோஹன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.வசந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ரிச்சர்ட் கேவின் படத்தொகுப்பை கவனிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

