'டூப்' போடாமல் சண்டைக் காட்சியில் அசத்திய வரலட்சுமி

'டூப்' போடாமல் சண்டைக் காட்சியில் அசத்திய வரலட்சுமி

1 mins read
bbc41179-cc20-43ad-aa1b-60b8c570d3d0
-

தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, தற்போது கே. வீரக்குமார் இயக்கத்தில் 'சேஸிங்' என்ற சண்டைக் கலந்த 'திரில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் முழுவதும் மலேசியாவில் உருவாகிறது.

இந்தப் படத்தின் சண்டைக்காட்சி ஒன்றைப் படக்குழு அண்மையில் படமாக்கியது. அதில் வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், 'டூப்' எதுவுமில்லாமல் சண்டை போடுகிறார். அந்தக் காணொளியைத் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலட்சுமி அதில், "கடுமையான உழைப்புக்குக் கிடைத்த பலன். இதை யாரும் வீட்டில் முயற்சி செய்ய வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.