ஒளிப்பதிவாளரை வியப்பில் ஆழ்த்தும் நயன்தாரா

ஒளிப்பதிவாளரை வியப்பில் ஆழ்த்தும் நயன்தாரா

1 mins read
f2f27698-f573-4e70-acb7-f20c33408a69
-

முப்பத்தைந்து வயதாகிவிட்ட நயன்தாராவுக்கு சிவகார்த்திகேயன் போன்ற இளவட்ட நடிகர்களுடன் நடிக்கும்போது அவர் முகத்தில் முதிர்ச்சி சற்று அதிகமாகவே தெரிகிறது என்ற பேச்சு அடிபடுகிறது. அதனால் முகத்துக்கருகில் படமாக்கும்போது தன்னை இளமையாகக் காண்பிக்குமாறு ஒளிப்பதிவாளர்களைக் கேட்டுக் கொள்கிறார்.

தான் சொல்வது போன்று இளமையாகத் தன்னைத் திரையில் காண்பித்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் நயன்தாரா, உடனே அந்த ஒளிப்பதிவாளருக்கு தன் சார்பில் விலையுயர்ந்த பரிசுப் பொருளைக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறாராம்.