'இயக்குநர் ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்'

'இயக்குநர் ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்'

2 mins read
4af6696f-c28c-4887-907d-06cc455bfbeb
-

என் கைவசம் பத்துப் படங்கள் இருக்கின்றன. ஆனால் என்னால் அவற்றில் நடிக்க முடியவில்லை என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்திலிருந்து நடிகர் வடிவேலு விலகியதால் அந்தப் படத்தைத் தொடர முடியவில்லை. அதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்குத் தயாரிப் பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வரு கிறார்.

வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க, வடிவேலு வுக்குத் தகவல் அனுப்பி, அவரை விசாரணைக்கு அழைத்திருக்கிறது தயாரிப் பாளர் சங்கம்.

இந்நிலையில், அவர் ஒரு பேட்டியில் "படங்களில் சண்டைக்கும் நகைச் சுவைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால் இவை இரண்டையும் இணைத்து அதன்படி என்னை 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'யில் நடிக்கச் சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன். படத்தில் மூன்று வேடங் களில் நான் நடிக்கவேண்டும். அப்படி இருக்கும்போது என்னுடைய யோசனைகள் இல்லாமல் துளிகூடப் படத் தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வாய்ப்பே இல்லை.

"படத்தில்கூட யாரையும் கொல்வதற்கு விடமாட்டேன். 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் என்னு டைய மாமாவாக நடித்திருப் பார் நாசர்.

"அவரைப் படத்திற்காக நான் கொல்லவேண்டும். அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நான் அதைச் செய்ய மறுத்து விட்டேன். வேறு காட்சி படமாக்கப்பட்டது.

"இப்படி திரையில்கூட யாருக்கும் துன்பம் இழைக்

கக்கூடாது என நினைக்கும் நான், நிஜத்தில் யாராவது கெட்டுப்போக வேண்டும் என்று நினைப்பேனா?

"24ஆம் புலிகேசி' படம் தொடர்பாகப் பேசலாம் வாங்க என்று நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்னைக் கூப்பிடுகிறது. நான் ஏன் செல்ல வேண்டும்? என்னப் பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளரோ, இயக்கு நரோ என்னிடம் நேரில் பேசி சரி செய்யவேண்டும்? என் கையில் இப்போது பத்து படங்கள் இருக் கின்றன. ஆனால் ஷங்கரும் தயாரிப்பாளர் சங்கமும் நெருக்கடி கொடுத்து, என்னை முடக்கி உள்ளனர்," என்று வருத்தம் தெரிவித்தார் வடிவேலு.