சுடச் சுடச் செய்திகள்

‘சிண்ட்ரெல்லா ஹாலிவுட் படம் அல்ல’ 

ராய் லட்சுமி கதாநாயகியாக நடித்து வரும் படம் ‘சிண்ட் ரெல்லா’. சாக்‌ஷி அகர்வால், கல்லூரி வினோத், கஜராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அஸ்வமித்ரா இசை அமைத் துள்ளார். ராமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

‘சிண்ட்ரெல்லா’ என்பது மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்குச் சொல்லப் படும் கதைகளில் வரும் தேவதை. இந்த வேடத்தை மையப்படுத்தி பல ‘ஹாலிவுட்’ படங்கள் இதே பெயரில் வந்திருக்கின்றன. அதனால் இந்தப் படம் அவற்றின் மறுபதிப்பு என்று கூறப்படுகிறது. ஆனால் இதனை மறுக்கிறார் இயக்குநர் வினோ வெங்க டேசன். 

இதுகுறித்து அவர் பேசும் போது, “‘சிண்ட்ரெல்லா’ வேடத் தை மையமாகக்கொண்டு ‘ஹாலிவுட்’ படங்கள் வந்தி ருப்பது உண்மைதான். இந்தப் படத்தில் ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ வேடத்திலும் மற்றொரு மாறுபட்ட வேடத் திலும் நடித்திருக்கிறார்.

“இதுவும் ஒரு வகையில் பழிவாங்குகிற கதைதான். ஆனால் இதன் திரைக்கதை இதுவரையில் சொல்லப்படாத கதையாக இருக்கும். 

“‘சிண்ட்ரெல்லா’ கதா பாத்திரத்திற்கு அதிகமான ‘கிராபிக்ஸ்’ காட்சிகள் இருக்கும். மற்றபடி இது மர்மம் நிறைந்த பயங்கரமான படம் என்பதால் விரிவாகச் சொல்ல  முடியவில்லை,” என்றார் இயக்கு நர் வினோ.

ராய் லட்சுமி நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து ‘சவுகார் பேட்டை’ திரைப்படத்தில் நடித் தார். இவருடைய நடிப்பில் வெளிவந்த ‘நீயா 2’ படமும் அவருக்கு நல்ல பெயர் வாங்கித் தரவில்லை. 

அதனால் உடல் எடையைக் குறைத்து ‘பாலிவுட்’ பக்கம் பறந்தார் ராய் லட்சுமி.  

‘பாலிவுட்’டில் நடிகைகள் ஒல்லியாக இருப்பதால் ராய் லட்சுமி தற்பொழுது உடல் இளைத்து கச்சிதமாக காணப்படுகிறார். அதனால் கடந்த சில நாட்களாக  தனது கவர்ச்சியான புகைப்படங்களைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அதைப் பார்த்து கோலிவுட் ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon