பார்த்திபன்: ரஜினியின் பாராட்டால் சிலிர்த்துப் போனேன்

‘ஒத்த செருப்பு’ படத்தின் மூலம் அனைத்துலக திரைப் படைப்பாளி களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பார்த்திபன். திரும் பிய திசையில் இருந்தெல்லாம் பாராட்டுகள் குவிகின்றனவாம். 

அதிலும் குறிப்பாக, ரஜினியின் பாராட்டுகளைக் கேட்டபோது தன் உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது என்கிறார். ‘ஒத்த செருப்பு’ படத் தில் தனி ஆளாக நடித்து, தயா ரித்து இயக்கியும் உள்ளார் பார்த்திபன். 

உலக சினிமாக்களில் இப்படி யொரு முயற்சியில் ஈடுபட்டவர் களை விரல் விட்டு எண்ணிவிட லாம். இந்த முயற்சியில் சாதித்துக் காட்டியவர்கள் ஒன்றிரண்டு பேர் தான்.

“மாசிலாமணி என்ற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இந்தப் படம் முழுக்க உலா வருகிறது. அவர் மீது ஒரு கொலைப்பழி விழு கிறது. கொலை செய்தாயா, இல் லையா? என்ற கேள்விக்கு அவன் என்ன பதில் செல்கிறான் என்பது தான் கதை. 

நடந்துவிட்ட கொலைக்கு ஆதாரமாக ஒரு செருப்பு காண் பிக்கப்படுகிறது. அதன் அளவு 7. ஆனால் கதாநாயகன் மாசிலாமணி யின் கால் அளவோ 11. இந்தக் கொலையுடன் அவனுக்கு என்ன தொடர்பு? மாசிலாமணி என்பவன் யார்? அவனிடம் ஏன் விசாரணை நடக்கிறது? என்பதைத் தனி மனிதனாகச் செயல்பட்டு திரை யில் காட்சிப்படுத்தி உள்ளார் பார்த்திபன். அதனால்தான் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என படத்துக்குத் தலைப்பு வைத்தாராம். 

இப்படியொரு படத்தை உரு வாக்க வேண்டுமென 15 ஆண்டுக ளுக்கு முன்பே யோசித்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், அந்த எண்ணத்தை இப்போதுதான் செயல்படுத்த முடிந்ததாம்.

“ரசூல் பூக்குட்டி, ராம்ஜி, சந்தோஷ் நாராயணன் போன்ற திறமையான கலைஞர்களின் உதவியோடு தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட படமாக உருவாக்கி இருக்கிறேன். ஏன் இந்தப் படத்தைச் சொந்தமாகத் தயாரித் தீர்கள்? என்று கேட்கிறார்கள். இப்படிப்பட்ட கதைகளைப் பெரும் பாலானவர்கள் தயாரிக்க முன்வர மாட்டார்கள். ஆனால் மிகச் சாதா ரணமான ஒரு படத்தைத் தொழில் நுட்ப ரீதியில் நல்ல தரத்துடன் எடுத்துவிட்டால் திரைப்பட விழாக் களுக்கு அனுப்பிவிடலாம். 

“இந்தப் படம் இங்கேயும் திரைப்பட விழாக்களிலும் ரசிக்கப் பட வேண்டும் என விரும்பினேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் என்பதே எனது இலக்கு. அதைச் சாதிக்க எனக்கு சுதந்திரம் தேவைப்பட்டது,” என்கிறார் பார்த்திபன்.

முன்னணி கதாநாயகர்களை வைத்துப் படம் இயக்க வேண்டும் எனும் விருப்பம் இவருக்கும் உள்ளதாம். எனினும் அதற்காக யாரையும் தேடிச்சென்று வாய்ப்புக் கேட்பதில் விருப்பமில்லையாம். ஏதேனும் முன்னணி நடிகர் தமக்கு வாய்ப்பு அளிக்கும் பட்சத்தில் தனது திறமையைத் திரையில் காட்டத் தயார் என்கிறார். 

“எந்த ஒரு கலைஞனுக்கும் சுயமரியாதை மிகவும் முக்கியம். ஏதேனும் விழாக்களில் பார்க்கும் போது முன்னணி நடிகர்களிடம் நாம் இணைந்து ஒரு படம் பண்ணலாமா? என்று கேட்பேன். அவர்களும் தலையாட்டுவார்கள். அதற்காக மீண்டும் மீண்டும் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி, ‘ஒரு காலத்தில் நான் பெரிய இயக்குநர். எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று கேட்பதை என்னை நானே அவமானப்படுத்திக் கொள்வது போன்றது,” என்கிறார் பார்த்திபன்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon