சுடச் சுடச் செய்திகள்

அழகிப் பட்டத்தை இழந்த  இளம் நடிகை

தன் மீது சுமத்தப்பட்ட பண மோசடி புகார் காரணமாக தனக்கு வழங்கப்பட்ட அழகிப் பட்டத்தை இழந்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

இவர் ‘8 தோட்டாக்கள்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர். பெங்களூருவைச் சேர்ந்த இவரின் உண்மையான பெயர் தமிழ் செல்வி. 

தமிழ்ப் பெண்களுக்கு அழகிப் போட்டிகளில் அவ்வளவாக வாய்ப்பு கிடைப்பதில்லை என்ப தால் தமிழ் பெண்களுக்கான அழகிப் போட்டியை ஏற்பாடு செய்திருப்பதாக கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தான் தெரிவித்திருந்தார் மீரா.

ஆனால் திடீரென அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அழகிப் போட்டி என்ற பெயரில் மீரா பலரி  டம் பணம் வசூலித்து ஏமாற்றி விட்டதாக புகார் எழுந்தது.

ஆனால் இதை மறுத்த மீரா மிதுன், அஜித் ரவி, ஜோ மைக்      கேல் ஆகிய இருவர் தம்மை மிரட்டுவதாகவும், தன் சமூக வலைத்தளப் பக்கத்தை முடக்கி, அதில் தவறான தகவல்களைப் பதிவிடுவதாகவும் குற்றம்சாட்டி னார். மேலும் இது தொடர்பாக காவல் ஆணையரிடம் புகாரும் அளித்தார். 

இந்நிலையில் புதிதாக எழுந்த பண மோசடி குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2016இல் மீராவுக்கு வழங்கப்பட்ட மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை திரும்பப் பெறுவதாக மிஸ் சவுத் இந்தியா அமைப்பு பகிரங்கமாக அறிவித்துள்ளது. இனி மேல் அந்தப் பட்டத்தை எங்கும் அவர் பயன்படுத்த அனு மதியில்லை எனவும் எச்சரித் துள்ளது. 

சினிமாவில் நடிப்பதற்கு முன் மிஸ் குயின் ஆஃப் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா ஆகிய போட்டிகளில் அழகிப் பட்டம் வென்றுள்ளார் மீரா மிதுன். 

இந்நிலையில் தன் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டுகளை திட்ட வட்டமாக மறுத்துள்ளார் மீரா மிதுன்.

இது குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப் போகிறாராம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon