'ராட்சசன்' படத்திற்கு பிறகு 'ஆடை', 'அதோ அந்தப் பறவை போல' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் அமலாபால். இதில் 'ஆடை' படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். மர்மம் நிறைந்த கதையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.
அதேசமயம் 'ஆடை' என்று இந்தப் படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் பல காட்சிகளில் ஆடைகளைக் குறைத்து அதிரடியான கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அமலாபால். இந்நிலையில், நேற்று முன்தினம் தணிக்கைக் குழுவினரின் பார்வைக்கு திரையிடப்பட்ட இந்தப் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. அதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

