5வது முறையாக ஒன்று சேரும் ‘சூப்பர்’ ஜோடி

தமிழ்த் திரைப்படத்தில் முன்னணி நடிகர் களில் ஒருவராக விஜய் சேதுபதி விளங்குகிறார். இவர் நடித்து முடித்த பல படங்கள் வெளிவரக் காத்துக்கிடக்கின்றன. 

அவற்றில் ‘லாபம்’, ‘சயிரா நரசிம்ம ரெட்டி’, ‘சங்கத்தமிழன்’ உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே விஜய் சேதுபதியுடன் இணைந்து, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ரம்மி’, ‘தர்மதுரை’, ‘இடம்பொருள் ஏவல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதை அடுத்து 5வது முறையாகத் தற்போது ஜோடி சேருவது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடிக்கும் ‘சங்கத்தமிழன்’ படத்தில் ரா‌ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். 

இரட்டை வேடங்களில் நடிக்க விஜய் சேதுபதி 8 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon