அடம்பிடிக்காத டாப்ஸி

அடம்பிடிக்காத டாப்ஸி

2 mins read
a4b99882-7701-4328-bf2f-6f6ccb61ef78
-

நல்ல ஒரு கதை. நாயகிக்கு முக்கிய கதாபாத்திரம். இயக்குநர் ஒன்று என்றால் பத்தாக நடித்து அவருடைய பாராட்டைப் பெறவேண்டுமா? கூப்பிடுங்கள் நடிகை டாப்ஸியை என்று சொல்லுமளவுக்கு 'பாலிவுட்'டில் நல்ல பெயருடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் டாப்ஸி.

தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்துக் கடினமாக உழைத்து 'பாலிவுட்'டில் தனக்கென்று ஒரு பெயர் எடுத்துள்ளார். இவர் படப்பிடிப்புத் தளங்களில் அடம் பிடிப்பது இல்லை. பிரச்சினை செய்வது இல்லை. சமத்தாக உள்ளார். அதனால் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், முன்னணி நாயகர்கள் விரும்பும் நடிகையாக உள்ளார் டாப்ஸி. இந்த நல்ல குணங்களாலேயே அவருக்கு படங்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் டாப்ஸி நடித் துள்ள 'கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டக் காட்சி அண்மை யில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

'கேம் ஓவர்' படம் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை சசிகாந்த் தயாரித்துள்ளார். தமிழ் முன்னோட்டக் காட்சியை தனு‌ஷும் தெலுங்கு முன்னோட் டக் காட்சியை ராணாவும் வெளியிட்டனர்.

'இந்தப் படம் குறித்து டாப்ஸி கூறும்போது, "படத் தில் என் கதாபாத் திரத்தின் பெயர் ஸ்வப்னா. அந்தக் கதாபாத்திரம் சவாலானதாக இருந்தது. அதனால்தான் அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார். 'கேம் ஓவர்' படம் இம்மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

டாப்ஸி கடந்த 2017ஆம் ஆண்டு மும்பையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கினார். அந்த வீட்டில் அவர் தனது தங்கை ஷகுனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் குடியிருக்கும் இடத்திலேயே மற்றொரு வீடு விற்பனைக்கு வந்ததை அறிந்து ரூ.6 கோடி கொடுத்து வாங்கியுள்ளார்.

3 படுக்கை அறைகள் கொண்ட அந்த வீட்டை அலங்கரிக்கும் பொறுப்பை தன் சகோதரியிடம் விட்டிருக்கிறார் டாப்ஸி.

30 வயதாகும் முன்பு சொந்த வீடு, கார், நிலையான தொழில், கடன் இல்லா வாழ்க்கை வேண்டும் என்று விரும்பினார் டாப்ஸி.

தற்போது ஒன்றுக்கு இரண்டு வீடுகள் வாங்கியுள்ளார், சொகுசு கார் வைத்துள்ளார், கடன் இல்லை, பட வாய்ப்புகளும் விளம்பரப் பட வாய்ப்புகளும் வந்து குவிகின்றன.

இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாகி இருக்கும் நிலையில் தற்பொழுது அவர் நடித்திருக்கும் 'கேம் ஓவர்' படத்தின் முன்னோட்டக் காட்சியையும் ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.