கவர்ச்சிக்குத் தயாராகும் கீர்த்தி சுரேஷ்

கோலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது ‘பாலிவுட்’டில் நடிக்க உடல் எடை யைக் குறைத்ததுடன் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக உள்ளார். அதைக் கேள்விப்பட்ட ‘கோலிவுட்’ அதிர்ச்சி யில் இருக்கிறது.

‘சாவித்ரி’ வாழ்க்கை வரலாறு படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற நடிகை, ‘கோலிவுட்’டில் நாகரிக உடை அணிந்தாலும் அதிலும் கவர்ச்சி வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

இவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் பிரமாதமாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் நடித்த ‘சர்கார்’ படத்தில் அவருக்கு சரியாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

அதனால் இனி தனக்கு முக்கியத் துவம் இருக்கும் படங்களில் மட்டும் நடிக்கப்போவதாக கூறி, அதுபோன்ற கதைக்காகக் காத்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த கதை ஒன்றும் அவருக்குக் கிடைக்கவில்லை. சில மாதங்களாக எந்தப் படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இந்நிலையில் போனி கபூர் தயாரிப் பில், அஜய் தேவ்கனுடன் ‘பாலிவுட்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, படப்பிடிப்பு தற்பொழுது நடந்துகொண்டு இருக்கின்றது.

இந்தி நடிகைகள் ஒல்லியாக கவர்ச்சியாக நடிப்பதைப்போல தானும் நடிக்க முடிவெடுத்து கடும் உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையைக் குறைத்து ஒல்லியாக மாறியிருக்கிறார்.

அத்துடன் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று அவர் ‘பாலிவுட்’டில் கூறியதாக செய்திகள் வெளிவருகின்றன. கீர்த்தி சுரே‌ஷின் மெலிந்த உடலமைப்பைப் பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். அவரின் ஒல்லியான படங்கள் வலைத் தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!